அப்போது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு தொம்மைராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.