இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக முத்து மாரியம்மன் கோயில் பூட்டப்பட்டு வழிபாடு ஏதும் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் ஒரு பிரிவினர் முத்துமாரியம்மன் ஆலய பூட்டை உடைத்து தங்களுக்கு சாதமாக நீதிமன்றம் கட்டளை வழங்கி உள்ளது என கூறி வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அங்கு மூன்று தரப்பினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு பிரிவை சேர்ந்த அள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக தலையிட்டு கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலை நீதிமன்ற உத்தரவு வரும் வரை பூட்டி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.