இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் அவர்களால் தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் துணிச்சலான தொழில்முனைவோருமான தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ. 5.00 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர் (மகளிர் மட்டும்) தமிழகத்தில் பிறந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள், போன்ற முழு விபரங்களுடன் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், கேட்டுக் கொண்டுள்ளார்.