சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை: 29ல் தொடங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே கூடுதல் விமான சேவை வருகிற மார்ச் 29 முதல் தொடங்கும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான தூத்துக்குடிக்கு, சென்னையில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ புதிய மாலை நேர விமான சேவையை அறிவித்துள்ளது. இந்த புதிய சேவையானது வரும் மார்ச் 29 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பகல் நேரங்களில் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த இரவு நேர சேவை தொடங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி