தூத்துக்குடி: நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. மூவர் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த  நடிகை தீபாவின் தந்தை புலவர் கணேசன் (72), அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாளால் தாக்கப்பட்டார். கோவில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைப்பு தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி