தூத்துக்குடி: குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்த வாலிபர் சாவு

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி கே.வி.கே. நகரை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (24) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4ம் தேதி விஷம் மருந்து குடித்துள்ளார். 

அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (பிப்.7) இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி