தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்காெலை

தூத்துக்குடியில் கல்லூரிக்குச் சென்று மேல்படிப்பு படிக்குமாறு தாய் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்முருகன் மகன் பெரியசாமி (18), இவரது தந்தை வெளிமாநிலத்தில் வேலை செய்து வருகிறார். பெரியசாமி பிளஸ் 2 வரை படித்துவிட்டு பெயின்டர் வேலை செய்து வருகிறார். பெரியசாமியை அவரது தாயார் கல்லூரிக்குச் சென்று மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று அதற்காக விண்ணப்பம் செய் என்று வற்புறுத்தினாராம். ஆனால் பெரியசாமிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறினாராம். 

இந்நிலையில் நேற்று (மார்ச் 25)  அவர் தாயார் உறவினரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் வீட்டின் மாடியில் உள்ள அறையின் மின்விசிறியில் பெரியசாமி சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் பெரியசாமியின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி