தூத்துக்குடி: மனைவியை பிரிந்த மன வேதனையில் வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த புஷ்பராஜ் (40) என்ற துறைமுக தற்காலிக தொழிலாளர், குடும்பப் பிரச்சனை மற்றும் மனைவியுடன் விவாகரத்து காரணமாக பெற்றோருடன் வசித்து வந்தார். சனிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி