தூத்துக்குடி மாவட்டம் மடத்தூா் நெடுஞ்சாலை அருகே ‘பங்கய மலராள் கேழ்வன். ’ என்று தொடங்கும், பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது. மடத்தூரைச் சோ்ந்த ராஜேஷ், பழமையான கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் ஆறுமுகனேரியைச் சோ்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளா் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப் பாா்வையிட்டாா்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்