தூத்துக்குடி: நடுக்கடலில் சிக்கிய 6 மீனவர்கள் மீட்பு

கொச்சியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மணப்பாடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், படகின் எஞ்சின் பழுதால் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கக் கோரி குடும்பத்தினர் வலியுறுத்திய நிலையில், மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த தேடுதல் நடவடிக்கையில், கன்னியாகுமரி அருகே கடலில் தத்தளித்த மீனவர்களையும் படகையும் சக மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டு மணப்பாட்டிற்கு அழைத்து வந்தனர். இந்தச் சம்பவத்தால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி