விசாரணையில், புதியம்புத்தூரைச் சோ்ந்த முருகேசன் மகன் அசோக்குமாா் என்ற பப்பாளி(19), கருப்பசாமி மகன் தினேஷ்குமாா் (19), இடையா்காட்டைச் சோ்ந்த ஆரிபுத்திரன் மகன் தீபக்(20), புதியம்புத்தூரைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் அஜய்ராஜதுரை(20) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில், தினேஷ்குமாா், அஜய் ராஜதுரை ஆகிய இருவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு, இந்த நிறுவனத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து தாமிர வயா்களை பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனா்.