திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே கட்டாரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராபின் (3) என்ற சிறுவன், புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்தான். திருவிழா முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது, பின்னோக்கி வந்த அரசுப் பேருந்து அவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் முத்துவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.