தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படியும் நிர்வாகத் தேவைக்காகவும் திருநெல்வேலி சரகத்தில் ஒரே நாளில் 23 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல காவல் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவின்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களுக்கு ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.