தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2004-ல் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஒரு மாதம் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மக்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய பொதுமக்கள், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து சாலை மற்றும் குடிநீர் வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.