தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று (ஜூன் 10) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கோவில்பிள்ளை விளை, பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது, அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.
மேலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி வெற்றிவேல்புரம், சிவாரஜபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் மரிய பிலிப் மார்க்லின் (26), கலைஞர் நகர் ஆறுமுகசாமி மகன் வேல்குமார் 25 எனத் தெரியவந்தது. அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் யமஹா பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.