தூத்துக்குடி: சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் பஜார் பகுதியில் மது விற்ற பூபால்ராயபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜபாளையம் பகுதியில் மது விற்றதாக எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (33) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி