இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி புதுக்கோட்டை தேரிச் சாலையில் புதுக்கோட்டை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்த தெர்மல் நகரைச்சேர்ந்த ரீகன்(20), மகேந்திரன்(20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் அரசு பாதுகாப்பை திரும்ப பெற்றதால் ராகவ் சதாவுக்கு மத்திய அரசு பாதுகாப்பு