தூத்துக்குடி: வி.ஏ.ஓ. வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சந்தோஷ்நகரில் வசிக்கும் வி.ஏ.ஓ. மாரிமுத்து குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி