தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈசிஆர் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் சட்டவிரோதமாக 1½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனத்தின் டிரைவர் நிர்மல்ராஜ் (31), லோடுமேன் ஜெயராம் (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Motivational Quotes Tamil