தூத்துக்குடி: இளைஞர் கொலை வழக்கு.. 2 சிறார் உள்பட 5 பேர் கைது

கோவில்பட்டியில் மனோஜ் (18) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு மாணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் மீது மர்ம கும்பல் அரிவாள், கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளி மாணவர்களுக்கிடையேயான தகராறு பின்னர் பகையாக மாறி இந்தக் கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி