கழுகுமலை: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

கழுகுமலை அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். 

கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனி தெற்கு தெருவைச் சேர்ந்த பெண், அதே பகுதியில் உள்ள பலசரக்குகடை முன் நின்று கொண்டிருந்தாராம். அவரிடம் சின்ன காலனி நடுத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கார்த்திக் ராஜா (29) தகராறு செய்து, மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக் ராஜாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி