சென்னையில் வசிக்கும் ஓய்வு பெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிராஜ் வீட்டில் கதவை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் மோதிரம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த முத்துராஜா (32) என்பவரை கோவில்பட்டி பல்லாக்கு ரோட்டில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உறவினர் வீட்டுக்கு வந்தபோது பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக முத்துராஜா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.