தூத்துக்குடி: நெய்தல் கலைத் திருவிழா ஆயத்த பணிகள்.. மேயர் ஆய்வு

தூத்துக்குடியில் ஜூன் 13ஆம் தேதி துவங்க உள்ள நெய்தல் திருவிழா ஆயத்த பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் நெய்தல் கலைத் திருவிழாவானது தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ஆம் முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக நடைபெற்று வரும் ஆயத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்" என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி