பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிப்பு: பெண் போராட்டம்

வரதம்பட்டி பஞ்சாயத்தில் நூலகராக வேலை பார்த்த பரமேஸ்வரி என்ற ஊழியருக்கு ஏழு ஆண்டுகளுக்கான ஊதியம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி இவர் கடந்த 2001 முதல் 2007 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி மாவட்டம் வரதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள நூலகத்தில் நூலக பொறுப்பாளராக மாதம் 700 ரூபாய் என்ற குறைவான ஊதியத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார்

இந்நிலையில் பரமேஸ்வரியை பணி நிரந்தரம் செய்யாமல் வேறு ஒரு நபரை அந்த பதவிக்கு அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். மேலும் பரமேஸ்வரி வேலை பார்த்ததற்கு ஏழு ஆண்டுகளுக்கான சொற்பத்தொகையான சம்பளமும் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பரமேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து தனது ஏழு ஆண்டு ஊதியத்தை தரக்கோரி மனு அளித்து வருகிறார். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பரமேஸ்வரி மாவட்ட ஆட்சியர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட அமைந்தார். இதை தொடர்ந்து அங்கே வந்த பெண் காவலர்கள் அங்கிருந்து பரமேஸ்வரியை அங்கிருந்து வெளியேற்றினர்

தொடர்புடைய செய்தி