கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உலகராஜ் (26) மற்றும் மாரி கிருஷ்ணன் (21) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வாகனத்தில் வாள் மற்றும் அரிவாள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.