அரசுப் பேருந்தில் சோகம்: பயணி திடீர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசு நசரேன் (59) என்பவர், சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். மதுரை–திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே திடீரென மயங்கி விழுந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி