தூத்துக்குடி: போலீசை தாக்கி கொலை மிரட்டல்.. 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். லாரி வந்ததால் தப்பிக்க முடியாமல் நின்ற அவர்களை, சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பன் புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அஜித் குமார் (19), செல்வகுமார் (24), டேனியல் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி