தூத்துக்குடி: கோயிலுக்கு சென்ற சிறுமி மர்ம மரணம்

மடத்தூர் பத்திரகாளி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமி, வெள்ளிக்கிழமை இரவு தனது மகள் தனுஷா (4) உடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி திடீரென மயங்கி விழுந்ததால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி