கோவில்பட்டி: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி வாலிபர் பலி

கோவில்பட்டி அருகே தண்டவாளம் கடக்க முயன்ற 32 வயது இளைஞர் அருண், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். சென்னையில் வேலை செய்து வந்த அருண், தனது தாயைப் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பலியான அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி