கோவில்பட்டி ஒன்றிய தலைவர் சிவபாலன் அனைவரையும் வரவேற்றார் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கலந்து கொண்டு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன், மாநிலத் துணைத்தலைவர் பழனிச்சாமி, மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் மகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்புராஜ், லிங்கேஸ்வரி, மணி, ரத்தினவேல், குமார் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.