கோவில்பட்டி: தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

கோவில்பட்டி பகுதியில் இயங்கும் தனியார் மினி பேருந்துகள் மற்றும் பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மினி பேருந்துகளில் ₹2 முதல் ₹3 வரையிலும், தனியார் பேருந்துகளில் ₹3 முதல் ₹5 வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினசரி பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி