பேச்சுக்கலை பயிற்சி முகாமினை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் தொடக்கி வைத்து பேசினார். விருதுநகர் பேச்சுக்கலை பயிற்சியாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். சிறந்த பேச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு ரோட்ராக்ட் சேர்மன் ராஜ்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பழனி குமார், இளங்கோ, முத்து முருகன், கல்லூரி பேராசிரியர்கள் விஜய கோபாலன், பிரேமலதா, பாண்டி செல்வி, ஸ்ருதி உள்பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி ரோட்ராக்ட் செயலாளர் சோனிகா நன்றி கூறினார்.