2026-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கோவில்பட்டி வட்டத்தில் உள்ள திட்டங்களும் தெற்கு ஆதிதிராவிட ஆரம்பப் பள்ளி சிறப்பு முகாம் மையத்தை, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ. ஆ. ப. , அவர்கள் இன்று 16. 11. 2025 அன்று நேரில் பார்வையிட்டார். வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் பணிகள், குடிமக்கள் பூர்த்தி செய்யும் படிவங்களின் நிலை, முகாம் ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து அவர் பரிசீலித்தார். பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று தங்களின் வாக்காளர் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.