தூத்துக்குடி: மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்து மனு

தூத்துக்குடி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மது பாட்டில்களை பல்வேறு பகுதிகளில் மது பிரியர்கள் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மது பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் பத்து ரூபாய்க்கு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்து வருகிறார். 

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மது பாட்டில்களை பத்து ரூபாய்க்கு திரும்பப் பெறும் நடவடிக்கை அமல்படுத்தி உள்ளது. இந்த மது பாட்டிலை பத்து ரூபாய்க்கு திரும்பப் பெறும் உத்தரவை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் தனது கழுத்தில் காலி மதுபான பாட்டில்களை அணிந்தபடி வந்தும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெட்டியை தள்ளியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி