கோவில்பட்டி அருகே, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பேருந்து நிலையத்தில் 18 வயது வாலிபர் சஞ்சய் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் தாக்கியதில் அவருடன் இருந்த மற்றொருவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.