தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்பட்டது. அதில் 4 மினி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.