கோவில்பட்டி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கோவில்பட்டியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் வட்ட கிளை மாநாடு நடைபெற்றது. இதில், மாநில அரசின் தேர்தல் வாக்குறுதியான 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்க வேண்டும், சிபிஎஸ் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் வட்டத் துணைத் தலைவர் மல்லிகா கொடியேற்றி மரியாதை செலுத்தினார். வட்டத் தலைவர் சிந்தா மதார் பக்கீர் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி