தூத்துக்குடி: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850, அகவிலைப்படி வழங்க வேண்டும். பணி ஓய்வுக்குப் பின்னரும் காப்பீட்டுத் திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம். ஜேசுமணி தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் இல. ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி