மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதேபோல், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பி. கீதா ஜீவன், கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், 30 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மாநில அளவில் 47 மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் 1,074 மாணவர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அரசு கல்வித் திட்டங்களைப் பயன்படுத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி