தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் விஸ்வநாத நகரில் முன்னாள் ராணுவ வீரர் தேவராஜ் வீட்டில் முகமூடி அணிந்த மூவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நகை, பணம் கிடைக்காததால் வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தி, போலீஸ் வருவதை அறிந்ததும் அருகிலிருந்த வீட்டின் பைக்கை திருடி தப்பிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.