கோவில்பட்டி: கஞ்சா விற்பனை.. பிளஸ்-2 மாணவர் கைது

கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்தனமாரி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த சிறுவனை விசாரித்தனர். அச்சிறுவன் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாகப் பேசியுள்ளான். சோதனையில் அவனிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிளஸ்-2 படிக்கும் அச்சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து, நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி