தூத்துக்குடி மாவட்டம் கடலையூரைச் சேர்ந்த மாடசாமி (52) மற்றும் சின்னதம்பி (48) ஆகியோர் நீராவி தெப்பக்குளம் அருகே அமர்ந்திருந்தபோது தவறி குளத்தில் விழுந்தனர். அப்பகுதி இளைஞர்கள் சின்னதம்பியை உயிருடன் மீட்டனர். ஆனால், ஆழமான பகுதிக்குச் சென்ற மாடசாமியை கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு மீட்டபோது அவர் உயிரிழந்திருந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.