தூத்துக்குடி: வாலிபரை தாக்கி செல்போன் பறித்த வழக்கில் ஒருவர் கைது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சாலையில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி சக்திவேலை (22), மது அருந்த அழைத்ததாகக் கூறி, கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்று முத்துக்காளை (28) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சரமாரியாகத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றனர். காயமடைந்த சக்திவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கு போலீசார் முத்துக்காளையை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி