தூத்துக்குடி: வாலிபர் படுகொலை.. 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிட தொழிலாளி கார்த்திக் (28) என்ற வாலிபரை, மதுபோதையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த சகோதர்கள் வேல்முருகன், அய்யாதுரை, முனியசாமி ஆகியோர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டபோது இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி