கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த 60 வயது பாக்கியம், தனது மகன் வேல்சாமியுடன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். மதுப்பழக்கம் கொண்ட வேல்சாமி அடிக்கடி பணம் கேட்டு தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், பணம் தர மறுத்ததால் பாக்கியத்தை வீட்டில் இருந்த பொருட்களால் வேல்சாமி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பாக்கியம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்சாமியை கைது செய்துள்ளனர்.