செயல்முறை விளக்கம்: முதலில் கொத்தமல்லி விதைகளை நமது இரு கைகளினால் நன்கு அழுத்தி தேய்த்து விதைகளை சேகரித்து அதை 12 மணி நேரம் ஊரவைத்து தொடர்ந்து 36 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும்.
முளைக்கட்டிய விதைகளை 5 முதல் 8 செ. மீ ஆழம் கொண்ட டிரே தட்டில் அல்லது தண்ணீர் கோப்பையில் 3 செ. மீ (1 பங்கு மண்+1பங்கு இயற்கை உர கலவை) மண் நிரப்பி இதில் முளைக்கட்டிய விதைகளை சமமாக பரப்பி, அவற்றின் மீது மண் சிறிது தூவி, தண்ணீர் தெளித்து 24-48 மணி நேரம் பிளாஸ்டிக் பை அல்லது மூடியினால் அடைபட்ட சூழலில் அறை வெப்ப நிலையில் வைத்தால், நன்றாக முளைத்திருக்கும்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பையை அல்லது மூடியை நீக்கிய பின்பு தினமும் காலை, மாலை இரண்டு முறையும் மிதமான நீர் தெளித்து நேரடி வெயிலில் படாதவாறு மறைமுக ஒளி கிடைக்கும் அறையில் ஓர் பகுதியில் வைத்து நன்கு வளர்க்கவும். அறுவடை: 8-12 நாட்களில், 2- 4 இலைகள் வளர்ந்தவுடன், பச்சையாக வெட்டி உணவில் பயன்படுத்தலாம். சிறந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டவை.