4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன்(27) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பீரித்தா, குற்றவாளி காளீஸ்வரனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து இன்று (07.11.2025) தீர்ப்பளித்தார். இவ்வழக்கை புலனாய்வு செய்த ஆய்வாளர் நாககுமாரி, அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, தலைமை காவலர் அமிர்த ஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை 25 போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி