பைக் மீது லாரி மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!

கயத்தாறு - கடம்பூர் சாலையில், சாலைக் குழியில் விழுந்த நரசிம்மன் (65) மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரி ஓட்டுநர் நாகராஜனை விசாரணைக்காக அழைத்து வந்து லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி