கோவில்பட்டி: லாரி மோதி கணவன் பலி; மனைவி காயம்

விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (32) என்பவர், தனது மனைவி மனிஷாவுடன் (20) பைக்கில் கோவில்பட்டி–சாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் மனோகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மனிஷா முதலில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி