கடந்த 2019ம் ஆண்டு கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்ஊத்து பகுதியில் பரமசிவம் மகன் அண்ணாமலை (43) என்பவரை, அவரது உறவினர்களான உடையார் (76) மற்றும் கோதண்டராமர் (40) ஆகியோர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி இருவருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.